டெக்சாஸின், ஹூஸ்டனில் 11 வயது சிறுவன் ஒருவன் டிங் டாங் டிட்ச் (ding dong ditch) என்ற ஒரு பொழுதுபோக்கு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு நண்பர்கள் குழுவுடன் விளையாடிக்கொண்டிருந்த போதே சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஹூஸ்டன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, வீட்டுக் கதவின் மணியை அடித்துவிட்டு சிறுவன் ஒருவர் வீட்டை விட்டு ஓடுவதைக் கண்டதாக ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.