விளையாட்டு மைதான அகழ்வு பணிக்கு கண்டிப்பு

விளையாட்டு மைதான அகழ்வு பணிக்கு கண்டிப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மங்கேஷ்கர் பொது விளையாட்டு மைதான அகழ்வு பணியை வன்மையாக கண்டிக்கின்றேன் என நகர சபை உறுப்பினர் ஜீ. ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

திருகோணமலை தமிழர் பேரவை ஏற்பாடு செய்த விசேட கலந்துரையாடலையடுத்து லங்காசிறி ஊடக வலையமைப்பிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த அகழ்வு பணியை முன்னெடுக்கும் மத்திய கலாச்சார நிதியமானது பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு இங்கே இடம்பெறுகின்ற இந்த அகழ்வு பணியானது திருகோணமலை ஒரு வரலாற்று துறைமுகமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறைமுகமாகவும், அது திருகோணமலை நகர சபையின் காணிக்குள்ளே இருப்பதாக கூறிக் கொள்கின்றார்கள்.

ஆனாலும் கெசட் செய்யப்பட்ட அந்த 400 மீட்டர் தூரமானது திருகோணமலை கோட்டையில் இருந்து சங்கமித்த என்ற இடத்தோடு முடிவடைகின்றது. இருந்த போதிலும் நகர சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி அகழ்வு பணி முன்னெடுத்து வருவது தெட்ட தெளிவான உண்மையாகும்.

குறிப்பாக அகழ்வு பணி தொடர்பில் நகர சபைக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியாகவே தயாரிக்கப்பட்டு காணப்படுவதாகவும், நகர சபை உறுப்பினர் ஜீ. ஜெயபிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதே வேலை இவர்கள் அகழ்வுப்பணியை நிறைவு செய்துவிட்டு அறிக்கையினை இறுதியாக தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்குவார்கள் அதன் பின்னர் திருகோணமலை பொது விளையாட்டு மைதானம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என இறுதி நேரத்தில் கூறுவார்கள் எனவும் திருகோணமலையில் இதுவரை காலமும் அவ்வாறான செயற்பாடே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இது விடயத்தில் மக்கள் அவதாரமாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

மேலதிக செய்திகளுக்கு:-  Minna24news

இவற்றையும் பார்வையிடலாம் :- காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் அறிவித்தல்