-திருகோணமலை நிருபர்-
கின்னியா பொலிஸ் உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் தசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு பயிற்றுவிப்பாளரொருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிராந்திய உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, குறித்த சந்தேக நபரை அவரது வீட்டுக்கு முன்னால் சோதனையிட்டபோது அவரிடம் இருந்து இரண்டு கிரேம் 330 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் கிண்ணியா -ரஹ்மானியா -அக்ரப் வீதியில் வசித்து வரும் 27 வயதுடைய நபரெனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஹெரோயின் போதைப் பொருளுடன் திருகோணமலை பொலிஸ் போதை பொருள் தடுப்பினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த நபர் தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.