உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ ஏ ஜயனாத் தலைமையில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று 2024.02.15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, விளையாட்டு சட்டத்தின் கீழ் விளையாட்டு தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நடைமுறையில் செயற்படுத்தும் வகையில் இந்த பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது.