புத்தளம் நகரில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான விடுதியொன்றிலிருந்து இன்று புதன் கிழமை காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகரைச் சேர்ந்த மரியதாஸ் கிருஷாந்த (வயது – 23) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இன்று காலை 6 மணிக்கும் 6.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் குளியலறையில் வைத்து விற்றராசினை கையில் எடுத்து தனது இரண்டு கைகளினாலும் நேராக இழுக்க முற்பட்ட போது, குறித்த தராசின் முன்பக்கமாக உள்ள கூர்மையான பகுதி இளைஞனின் கழுத்தில் குத்தி கடுமையாக காயப்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் அந்த இளைஞனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை தந்தையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.