நுவரெலியாவில் நேற்று புதன் கிழமை விறகு சேகரிக்க சென்ற நபர் இன்று வியாழக்கிழமை ஓடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள கெனில்வத்தை 2ம் பிரிவை சேர்ந்த நாமல் (வயது – 46) என்ற திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று நண்பகல் தனது தந்தைக்கு விறகு சேகரிக்க சென்ற நிலையில் வீடு திரும்பாததால் தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாட்டை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கினிகத்தேன பொலிசார் கெனில் வத்தை 2ஆம் பிரிவில் உள்ள வன பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த நபர் ஓடையில் சடலமாக கிடப்பதை கண்டு பிடித்துள்ளதுடன் சடலம் கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லபட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் நடத்தி வருகின்றனர்.