வடக்கு மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றிலேயே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் 26 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்து நிகழ்ச்சிக்கு இடைநடுவே வந்த சிலர் திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் பல்வேறு பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.