விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இளைஞர்கள் குழுவினால் தாக்கப்பட்ட பொலிஸ் சர்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கசிப்பு வியாபாரம் செய்வதாக கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தை முடித்துக் கொண்டு குறித்த பொலிஸ் சர்ஜன்ட் தனது வீட்டிற்கு திரும்பும் போது, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்து இளைஞர் குழு பொலிஸை சரமாரியாக தாக்கப்பட்டதையடுத்து தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.