-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது 24) என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையினை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.