பஸ்களில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம்தனியார் துறையின் பங்களிப்புடன் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 40 AI CAMERA அமைப்புகள் அரச மற்றும் தனியார் பஸ்களில் பொறுத்தப்படவுள்ளன.
இந்த கமரா சாரதியின் நடத்தையைக் கண்காணித்துஇ சாரதியை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
இப் புதிய கமரா அமைப்பு சாரதி சோர்வடைவதையும், நித்திரை கொள்வதையும் கண்டறியும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.