விபத்தில் பிரான்ஸ் நாட்டு யுவதி உயிரிழப்பு

நெலுவ பகுதியிலிருந்து   லங்காகம நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று குறித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.