கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கம்பளை பகுதியைச் சேர்ந்த ஓஷத பந்துல பண்டார அலஹகோன் (வயது – 19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.