இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.
சுலைமான் அச்சன் என்ற சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. அவனது கழுத்து துண்டான நிலை இருந்துள்ளதபக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்தச் சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.
சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் ஒஹட் எய்னவ் இதை பற்றி ’இஸ்ரேல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
குறித்த பேட்டியில் “சிறுவனுக்கு சேதமடைந்த தலைப் பகுதியில் புதிய பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. எங்கள் மருத்துவர்களின் திறமையாலும் புதிய தொழில்நுட்பத்தாலும்தான் எங்களால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்தது.
நரம்பு, உணர்திறன் மற்றும் அசைவில் எந்தவித செயலிழப்புகளும் இல்லாமல் சிறுவன் செயல்படுவதும், இந்த அரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்தவித உதவியும் இல்லாமல் சிறுவனால் நடக்க முடிவதும் சாதாரண விஷயம் அல்ல. மிகவும் அரிதானது.
இப்படியான அறுவை சிகிச்சை செய்ய மிகவும் திறமைவாய்ந்த மருத்துவர்கள் தேவை. இது பொதுவான அறுவை சிகிச்சை இல்லை. அதிலும் குறிப்பாக சிறுவர்களுக்கு இப்படியான அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்த்தியான அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்களால் மட்டுமே முடியும்” என கூறியுள்ளார்.
சிறுவன் ஹசன் பிழைப்பதற்கு 50% மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்திருப்பதை அதிசயமாகவே கருதுகின்றனர் மருத்துவர்கள். இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடந்துள்ளது. ஆனால் இதைப் பற்றி மருத்துவர்கள் வெளியில் அறிவிக்காமல், சிறுவன் முற்றிலும் குணமடைந்தவுடன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். சிறுவனுக்குக் கழுத்து மற்றும் முதுகெலும்பை நேராக வைப்பதற்கு பிரத்யேக சாதனம் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளான். அவனது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.