-பதுளை நிருபர்-
விபத்து ஒன்றில் காயமடைந்த இருவரை தனது வாகனத்தில் ஏற்றி சென்று வைத்தியசாலையில் ஒப்படைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்.
சீரற்ற காலநிலையால் ஹொப்டன் பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்களை பார்வையிட சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை பால் சபைக்கு அருகாமையில் உந்துருளி ஒன்று வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளதை அவதானித்துள்ளார்.
அதில் பயணித்த தகப்பன், மகன் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் இருப்பதை அவதானித்த வடிவேல் சுரேஷ் உடன் தனது வாகனத்தினை நிறுத்தி காயமடைந்த இருவரையும் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று பசறை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார் .
காயமடைந்த இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

