புத்தளம் – திருகோணமலை ஏ-12 வீதியின் 18ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கனரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் ஹொரகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதான இருவர் உயிரிழந்தனர்.