க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறையை சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.