கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக பரிசோதனைகளுக்காக உடலின் பாகங்கள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை – மகுலுஎல்ல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான இந்த தாதி, அண்மையில் பண்டாரவளை பகுதியில் உள்ள தனது வீட்டில் விடுமுறைக்கு வந்திருந்தார்.
கடந்த 26ம் திகதி, தனது நண்பர்கள் குழுவுடன் சுற்றுலா செல்வதற்காக காலை உணவை சாப்பிட தயாராகி கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார்.
பின்னர் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.