லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் சுவிண்டன் பகுதியில் தோட்ட விடுதியொன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விண்டன் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடமை நேரத்தில் தான் விடுதிக்கு சென்று வருவதாக தொழிலாளர்களிடம் கூறிவிட்டு விடுதிக்கு சென்றுள்ளார். இருப்பினும் மிக நீண்ட நேரமாகியும் அவர் வராததால் தொழிலாளர்கள் தோட்ட விடுதிக்கு சென்று பார்த்த போது அவர் விடுதியில் உள்ள கட்டில் ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.