சிறைச்சாலையில் 8 வருடகாலத்தின் பின் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம, தலாகென, முல்லேரியா மற்றும் பேதியாகொடை போன்ற பகுதிகளில் ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரிடம் இருந்து 10.4 கிராம் ஐஸ் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.