நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
குறித்த திட்டத்திற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52021 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.