நுவரெலியா மதுரட்ட கலபட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் முகம் மற்றும் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் மனைவி பொசன் போயாவை முன்னிட்டு விகாரைக்கு சென்றிருந்த வேளையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் திறந்து கிடப்பதால் சந்தேகமடைந்த அயலவர்கள் உயிரிழந்தவரின் மனைவிக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டதுடன், பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.