கம்பஹா தொம்பே பகுதியில் பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம் உண்டபோது தொண்டையில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
தொம்பே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு பலியானார்.
கடந்த 9ஆம் திகதி பாடசாலையில் இடைவேளை நேரத்தின்போது குறித்த சிறுமி வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த போது தொண்டையில் வாழைப்பழம் சிக்கியுள்ளது. பாடசாலையின் ஆசிரியர், ஊழியர்கள் அவரை தொம்பே ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுமிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
5 நாட்களாக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.