வாழைச்சேனை பகுதியில் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நாசிவன்தீவு பகுதியிலுள்ள பாலத்தை கடந்து வெள்ளம் பாய்ந்து செல்வதனால் குறித்த வீதி ஊடாக வருகைதந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
கிராம மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காணமல் போன இளைஞன் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.