ஹல்கந்தவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் வாழைக்குலை ஒன்றை திருடி தப்பிச் சென்றுக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இசை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்குவதற்காக வாழைக்குலையை திருடிச் சென்ற போது மூவரையும் கிராம மக்கள் துரத்திச் சென்ற நிலையில் ஹல்கடவத்தை பிரதேசத்தின் ஊடாக பாயும் புஸ்ஹெலி ஆற்றில் குதித்து இருவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து இருந்தமையினால் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மற்றய 2 பேரையும் அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கையை பொலிஸ் கடற்படை பிரிவினர் மேற்கொண்டுள்ள நிலையில், இதுவரை காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.