யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த நபரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.