வவுனியா நொச்சுமோட்டையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத குழுவொன்று வீடொன்னுள் நுளைந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டிவிட்டு திருட முற்பட்ட போது வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய போது திருடர்கள் காயமடைந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.
மாரிமுத்து செல்வநாயகம் (வயது – 58) மற்றும் அவரது மனைவி செ. செல்வராணி தம்பதியினரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர். இதன் போது செல்வநாயகம் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த திருட்டு தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.