மன்னாரில் இலுப்பக்கடவை மூன்றாம்பிட்டி பகுதியில் இளைஞரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று புதன்கிழமை காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பின்னர், காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியாறு பகுதியை சேர்ந்த 50 வயதான பெண்ணும், 27 வயதான ஆணுமே தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பாலியாறு பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.