கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை மதுபோதையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்இறுதியாக கண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றதடுப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
