தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது.
இதன் தாக்கம் காரணமாக, இன்று சனிக்கிழமை மற்றும் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
