மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் ஒரு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அப் பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஆபத்தான கட்டத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சின்ன தட்டுமுனை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் எனவும் நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது உயிரிழந்த பெண்ணின் கணவர் தங்கி வேலை செய்வதற்காக தூர இடங்களுக்கு செல்வதாகவும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த போது,
அப் பெண் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவனினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து வருவதாக சென்ற கணவர் மேசைமின்விசிறி வயரினால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளா முயற்சித்துள்ளார்.
வாகரை வைத்தியசாலைக்கு பின் பகுதியில் விஷம் குடித்து கிடந்த நிலையில் இளைஞர்களினால் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பொலிசாரினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பவுள்ளதாக தெரிவிக்கபடுவதுடன் இந்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.