பலாங்கொடை உடவெல பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளர் காவு வண்டி மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் ஓப்பநாயக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

