படல்கும்புர – பதுளை பிரதான வீதியின் படல்கும்புர புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பேருந்தும் பௌசரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பேருந்தின் சாரதி, நான்கு பயணிகள் மற்றும் பௌசரின் சாரதி ஆகியோர் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.