தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து, தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாரவூர்தியில் இருந்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களில், இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது பின்னால் வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.