மிஹிந்தலை கன்னட்டிய பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை பேருந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கற்குளம் கலத்தேவ பகுதியை சேர்ந்த முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் இந்திரசிறி என்பவரும் பேருந்தின் சாரதியுமே இதன் போது உயிரிழந்துள்ளனர்.
தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதி பேருந்து வீதியை விட்டு விலகியதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த மேலும் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.