வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மடுகந்தையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வாகனம், வெளிக்குளம் பகுதியில் வீதியின் குறுக்கே சென்ற மாடு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, ஜீப் ரக வாகனத்தில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.