சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 35 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.