மஹியங்கனையில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மஹியங்கனை – பிபில பிரதேசத்தில் நேற்று மாலை 6.00 மணியளவில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




