-அலுவலக செய்தியாளர் சௌமினி சுததந்தராஜ்-
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனும் முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதுடன் முச்சக்கர வண்டியினுள் இருந்த சிறுமி ஒருவரே இதன் போது சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் அருகில் இருந்தவர்கள் தெரிவிக்கையில்,
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தொலைபேசி பயன்படுத்தி கொண்டு வந்ததாகவும் முச்சக்கர வண்டியில் வந்தவர் சற்று கவன குறைவோடு வந்ததாகவும் தெரிவித்தனர்.
எனினும் இரு தரப்பினரும் இறுதியில் சமாதான உடன்படிக்கையில் வீடு சென்றதாகவும் அறியமுடிகின்றது.