மீரிகம பஸ்யால – கிரிஉல்ல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் வசித்து வந்த பேடி அலகே உபாலி லலித் திலகரத்ன (வயது – 40) என்ற ஒரு பிள்ளையின் தந்தையான துச்சக்கர வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பஸ்யாலயில் இருந்து வந்த முச்சக்கர வண்டி வலப்புறம் திரும்பும் போது மீரிகமவில் இருந்து சென்ற ஜீப் வண்டியுடன் மோதியதில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்திற்குள்ளான ஜீப், புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள கோவில் பெயருடன் அனுராதபுரம் நோக்கி பயணித்து கலசத்தை கொண்டு சென்று கொண்டிருந்த ஹோமாகம பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கிப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் அதில் பயணித்த பிக்கு பிரசன்னமாகிய போது சாரதி தப்பிச் சென்றதாகவும், சாரதி குறித்த சரியான தகவல்களை பிக்கு வழங்க தவறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் உரிமையாளர் ஊடாக சாரதியை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.