கொஹூவலை, களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கொஹுவலையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியபோது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடொன்றின் நுழைவாயில் கதவில் மோதியுள்ளது.
விபத்தில் காயங்களுக்குள்ளான தாய் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.