பண்டாரவளை துல்கொல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.