மன்னார் – முள்ளிக்குளம் வீதியில் ஸீனத் நகர் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்படி காயமடைந்தவர் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.