எல்பிட்டிய – ஓமந்த பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓமந்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.