வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே இவ்வாறு மரணித்துள்ளார்.
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.