கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் பிரதேச சபைக்குச் சொந்தமான குப்பைகளை ஏற்றும் உழவு இயந்திரத்தில் கடமைபுரியும் ஊழியர்களே இவ்விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் , முந்தல் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னால் சென்ற புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்த்திசையில் இருந்து வருகை தந்த காருடன் மோதியதுடன் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று ஊழியர்களும், மேலதிக சிகிச்சைக்காக முந்தல் வைத்தியசாலையிலிருந்து சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.