யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளரான 52 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.