மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளிய, விருதோடை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்காமையே விபத்துக்கான காரணம் என்றும் இதன்போது படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
