பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாகன வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனத்தை நடாத்தி 4 கோடியே 55 லட்சம் ரூபாவை மோசடி செய்த அதன் பிரதான முகாமையாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு அறை ஒன்றை பெற்று, ரீகல்ஸ் சேல்ஸ் தனியார் நிறுவனம் என்ற பெயரில் குறித்த நிறுவனம் நடாத்தி செல்லப்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரென அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.