புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன இலக்கத்தகடு விநியோகம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வாகன இலக்கத்தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.