-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் இன்று புதன்கிழமை பிற்பகல் பண்டாரவளை பதுளை வீதியின் தந்திரிய வீதியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் இடம் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முப்பது அடிக்கும் அதிகமான உயரமுள்ள மண்மேடு திடீரென வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் மீது இடிந்து விழுந்ததில் லொறி, முச்சக்கரவண்டி மற்றும் டபுள் கெப் என்பன நசுக்கப்பட்டதாகவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
